மைத்திரி-கூட்டமைப்பு சந்திப்பு:மீண்டும் பழைய குருடி கதை!


நாங்கள் ஐக்கிய தேசிய முன்னணிக்கு ஆதரவு வழங்குகின்றோமே தவிர அவர்களுடன் சேரவில்லையென  கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் புதிய விளக்கமளித்துள்ளார்.

இதனிடையே இன்று கூட்டமைப்புடன் சந்திப்பொன்றை நடத்திய மைத்திரி எதிர்வரும் 5ம் திகதி இன்னும் ஒரு நம்பிக்கை இல்லா பிரேரணை கொண்டுவரவும் அதனை வெற்றி பெறவைத்தால் ரணில் தரப்பு மீண்டும் ஆட்சியை பொறுப்பேற்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை அதற்கு முன்னராக எதிர்வரும் 3ம் திகதி அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் கதைக்க தயாராக இருப்பதாகவும் கூட்டமைப்புக்கு மைத்திரி பதிலளித்துள்ளார்.

அத்துடன் ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமிக்க முடியாது என்பதை மீண்டும் ஜனாதிபதி  கூட்டமைப்பிடம் கூறியுள்ளர்.

ஆனால் தாங்கள் ஜனாதிபதி ஆவதற்கு ரணிலும் உழைத்தார் என்பதை மறக்கக்கூடாது என்று சம்பந்தன் அப்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனிடையே இன்று மாலை 6 மணிக்கு சந்திப்புக்கு அறிவிக்கப்பட்டிருந்த போதும் சுமார் இரண்டு மணிநேர தாமத்தின் பின்னர்  இரவு 8 மணி வரை கூட்டமைப்பை காக்க வைத்து மைத்திரி சந்தித்திருந்தார்.

எனினும் ரணிலை பிரதமராக்கும் கூட்டமைப்பின் கனவு மீண்டும் இன்றைய சந்திப்பில் தோற்றுப்போயுள்ளது.


No comments