தமிழினப்படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணையை வலியுறுத்தி ஐரோப்பிய பாராளுமன்று முன் கவனயீர்ப்பு ஒன்று கூடல்!!

14.11.2018 ம் திகதி புதன்கிழமை மாலை 15.30   மணி தொடங்கி 17 மணி வரை  ஸ்ராஸ்பூர்க் ஐரோப்பிய பாராளுமன்றத்தின் முன்னதாக, தமிழ் இனப் படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணையை வலியுறுத்தியும் யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட நடைபயண கவனயீர்ப்பு போராட்டத்தை அனைத்துலகம் கவனத்திற்கொள்ள வலியுறுத்தியும், எம் தமிழினத்திற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி வேண்டியும் AJT ஸ்ராஸ்பூர்க்  இளையோர்களால் முன்னெடுக்கப்பட்ட இக்கவனயீர்ப்புப் போராட்டம் யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் அறவழிப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் ஸ்ராஸ்பூர்க் தமிழ் மாணவர்களினால் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது சீரற்ற கால நிலையிலும் பல மக்கள் உணர்வுபூர்வமாக இப்போராட்டத்தில் கலந்து கொண்டு ஐரோப்பிய ஒன்றியத்திடம் தமிழினப்படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணையை வலியுறுத்தியும் காரணமின்றி தமிழ் மக்கள் என்ற காரணத்தினால் பல வருடங்களுக்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய இலங்கை அரசிற்கும் அழுத்தம் கொடுக்க வேண்டியும். நடைபெற்றுக் கொண்டிருக்கும் நில ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டத்திற்கு ,காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்திற்கும் ஐரோப்பிய ஒன்றியம் தீர்வைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் எனக் கூறியும் ஐரோப்பிய பாராளுமன்ற வெளிநாட்டு வெளிவிவகார ஆணைக்குழு தலைவருடனும், தெற்காசிய  விவகார குழுத் தலைவியுடன் சந்திப்பு இடம்பெற்றது இச்சந்திப்பின்போது முக்கியமாக அனைத்துலக சுயாதீன விசாரணையே தமிழ் மக்களுக்கு நீதியைப் பெற்றுத் தரும் எனவும் தமிழ் மக்களின் நிரந்தர தீர்வு தமிழீழம் தான் என்பதை  வலியுறுத்தியிருந்தோம். 

இப்போராட்டத்தை ஐரோப்பிய பாராளுமன்ற ஊடகங்கள் பல கவனத்தில் கொண்டதுடன், ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் எமது கவனயீர்பை தமது கருத்தில் கொண்டு தாங்களும் குரல் கொடுப்பதாக உறுதியளித்து சென்றனர் "தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்" என்ற தாரகமந்திரத்துடன் இக் கவனயீர்ப்பு போராட்டம் இனிதே நிறைவுக்கு வந்தது.






No comments