வடகிழக்கை அமெரிக்காவிற்கு வழங்க தயார்!


சீனர்கள் சிங்களப் பகுதியுடன் நடத்திய 99 ஆண்டுகால குத்தகை போலஇ நாமும் வடகிழக்குப் பகுதியில் எங்கள் மூலோபாய இடங்களில் சிலவற்றை குத்தகைக்கு அமெரிக்காவுக்கு விடுவதற்கு விரும்புகிறோம். இது சீன ஊடுருவல்களில் இருந்து நம்மை காப்பாற்றுமென தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு இ கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் குடும்பங்களின் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜி. ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் நடாத்திய போராட்டம் 631 நாட்களை எட்டிய நிலையில் இன்று யாழ். நல்லூரில் இருந்து ஜ.நா அலுவலகம் வரை அடையாள நடை பவனி போராட்டம் நடாத்தப்பட்டது.

யாழ்.நல்லூர் முன்றலில் இன்று காலை சங்கத்தின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து நாவலர் வீதியில் உள்ள ஐநா அலுவலகத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ஜே. டிரம்ப்க்கான கடிதம் ஒன்றினை அச்சங்கத்தின் செயலாளர் கையளித்தார்.


குறித்த கடிதத்திலேயே நாமும் வடகிழக்குப் பகுதியில் எங்கள் மூலோபாய இடங்களில் சிலவற்றை குத்தகைக்கு அமெரிக்காவுக்கு விடுவதற்கு விரும்புகிறோமென தெரிவித்துள்ளார்.

No comments