Header Shelvazug

http://shelvazug.com/

யாழ் வந்த ரயிலில் இருந்து விழுந்த இளைஞன் பலி


வவுனியா- தாண்டிக்குளம் சாந்தசோலை பகுதியில் ரயிலில் இருந்து விழுந்த இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

யாழ்.மருதனார்மடம் பகுதியை சேர்ந்த ஸ்டீபன் என்ற இளைஞனே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார். கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த ரயிலில் இருந்து குறித்த இளைஞன் விழுந்துள்ளான்.

ஓமந்தை- சாந்தசோலை கிராமத்திலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்த இளைஞன் விளையாட்டாக ரயிலில் இருந்து குதித்ததாகவும்,  தவறி விழுந்ததாகவும் கருத்துக்கள் உள்ளன. ஆனாலும் உண்மையை உறுதிப்படுத்த முடியவில்லை.