கோடிகளில் டீலீங்: இன்றும் கூட்டமைப்பிலிருந்து பாய்ச்சல்!

மஹிந்த தரப்புடன் இணைந்து பதவிகளை பெற்றுக்கொள்ள ஏதுவாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கொழும்பில் முகாமிட்டுள்ளதாக தெரியவருகின்றது.

ஆகக்குறைந்தது பத்துக்கோடி முதல் முப்பது கோடி வரை காசும் அமைச்சு பதவிகளும் பேரம் பேசப்பட்டு வருகின்றது.சிலர் குடும்ப அங்கத்தவர்களிற்கு தொழில் வாய்ப்பும் கோரியிருப்பதாக தெரியவருகின்றது.

நேற்று காலை வவுனியாவிலிருந்த சிவசக்தி ஆனந்தன் பிற்பகல் கொழும்பு சென்று சேர்ந்துள்ளார். அவர் வர்த்தக வாணிபத்துறை அமைச்சு மற்றும் 30கோடி பணத்தை கோரியுள்ளமை உறுதியாகியுள்ளது.
யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் 30 கோடி பணமும் அடுத்த முறை தேசியப்பட்டியலில் இடமும் கோரியிருப்பதாக தெரியவருகின்றது.

இதேவேளை முக்கிய பிரமுகர் ஒருவர் ஊடாக கூட்டமைப்பின் தலைமையுடன் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கும் தலா பத்துக்கோடி தருவதாக மஹிந்த அணி பேரம் பேசியதாக சொல்லப்படுகின்றது.

எனினும் அதனை விடுத்து தனித்து பெரும்பாலானவர்கள் நேரடியாக தாமே களமிறங்கி பேரம் பேசிவருவதாக தெரியவருகின்றது.

இதனிடையே கனடாவிலுள்ள முன்னணி தமிழ் உணவக உரிமையாளர் ஒருவரே மஹிந்த தரப்பிற்கு பாய்வது தொடர்பில் வியாழேந்திரனிற்கு பாதை ஏற்படுத்தி கொடுத்ததாக சொல்லப்படுகின்றது.அதேவேளை அவர் செல்வம் அடைக்கலநாதன் உள்ளிட்டவர்களுடன் தனித்தனியே பேரம் பேசியுள்ளார்.எனினும் முதலில் வியாழேந்திரனே மஹிந்த பக்கம் பாய்ந்துள்ளார்.

தன்னுடன் ஒரே விமானத்தில் 12 மணி நேரத்திற்கு மேலாக கனடாவிலிருந்து கொழும்பிற்கு பறந்துவந்த போதும் வியாழேந்திரன் வாயே திறந்திருக்கவில்லையென செல்வம் அடைக்கலநாதன் பின்னர் நெருங்கிய வட்டாரங்களிடம் கவலை தெரிவித்துள்ளாhர்.

இதனிடையே இன்றைய தினமும் கூட்டமைப்பினரது பாய்ச்சல் தொடருமெனவும் சிலர் அமைச்சு பொறுப்புக்களை ஏற்கலாமெனவும் கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments