யாழ்.மாணவர்கள் மூவர் நீரில் மூழ்கி மரணம்!இரத்தினபுரி பலாங்கொடை, பான் குடா ஓயாவில் நீராட சென்ற யாழ்ப்பாணத்தை சேர்ந்த பல்கலைக்கழக மாணவர்கள் மூவர் மரணமடைந்துள்ளனர். சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் கற்கும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த மூன்று மாணவர்களே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த செல்வரட்ணம் திசான் (வயது-25), சரவணபவன் கோபிசன் (வயது-23) மற்றும் கோபாலகிருஸ்ணன் சாரங்கன் (வயது-25) ஆகிய மூவருமே உயிரிழந்துள்ளனர்.

No comments