மூன்றரை வருடத்தில் தனிப்பட்ட சுகபோகங்களையே தமிழ்க் கூட்டமைப்பு அனுபவித்தது
இன்று ஈபிடிபி கட்சி அலுவலகத்தில் ஊடகவியலாளர்களைச் சந்தித்த அவர்,
“தமிழ்த் தேசிக் கூட்டமைப்பினர்தான் இந்த அரசாங்கத்தைக் கொண்டுவர கடும் பாடுபட்டார்கள். அவர்கள் இந்த அரசாங்கத்தை நல்லாட்சி அரசாங்கம் என்று கூறுவதை எங்கும் கைவிட்டதில்லை. ஆனால் இப்போது தேர்தல் வரைப்போகிறது என்றவுடன் நல்லாட்சியை நம்பி ஏமாந்துவிட்டோம் நல்லாட்சி துரோகம் இழைத்துவிட்டது என்று கூக்குரலிட ஆரம்பித்துவிட்டனர்.
காற்றுள்ளபோதே தூற்றிக்கொள் என்பது போல தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு அண்மையில் ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. அவர்கள் அந்தச் சந்தர்ப்பத்தை சரியாக அணுகாமலேயே தவறவிட்டுவிட்டனர்” - என்றார்.
Post a Comment