சிறிலங்காவின் நாணயப் பெறுமதி மிக மோசமாகச் சரிவு


அரசியல் நெருக்கடிகளாலும், பொருளாதார நெருக்கடிகளாலும், சிறிலங்கா நாணயத்தின் மதிப்பு படுமோசமான வீழ்ச்சியைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது.

அமெரிக்க டொலர் ஒன்றுக்கான சிறிலங்கா நாணயத்தின் பெறுமதி, நேற்று 180.66 ரூபாவாக, சிறிலங்கா மத்திய வங்கியினால் முடிவு செய்யப்பட்டிருந்தது.

அமெரிக்க டொலருக்கு எதிரான சிறிலங்கா நாணயத்தின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 11 மாதங்களில், அமெரிக்க டொலருக்கு எதிரான சிறிலங்கா நாணயத்தின் பெறுமதி, 27 ரூபாவினால் வீழ்ச்சியடைந்துள்ளது.

2018 ஜனவரி மாதம் அமெரிக்க டொலர் ஒன்றின் பெறுமதி, 153 ரூபாவாக இருந்தது. அதையடுத்து, மார்ச் மாதத்தில், 157 ரூபாவாகவும், மே மாதம், 159 ரூபாவாகவும், ஜூலை மாதம் 161 ரூபாவாகவும், செப்ரெம்பர் மாதம், 164 ரூபாவாகவும், அதிகரித்திருந்தது.

கடந்த மாதம் 26ஆம் நாள் சிறிலங்காவில் அரசியல் குழப்பம் ஆரம்பித்த போது, 172.82 ரூபாவாக இருந்த அமெரிக்க டொலரின் பெறுமதி, நேற்று, 180.66 ரூபாவாக அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments