மூடப்பட்டது வடக்கின் மரபுரிமை மையம்!


வட மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் அமைச்சினால் யாழ்ப்பாணத்தில் திறக்கப்பட்ட பாரம்பரிய மையத்தை மூடியதன் பின்னணியில் வடக்கு ஆளுநரும் தமிழரசுக்கட்சி முக்கியஸ்தர்கள் சிலரும் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

வடமாகாணசபையின் முன்னாள் முதலமைச்சர் நீதிபதி சி.வி. விக்னேஸ்வரன் மற்றும் கல்வி அமைச்சர் கலாநிதி கே.சர்வேஸ்வரன் ஆகியோரால் திறந்து வைக்கப்பட்ட மையமே தற்போது மூடப்பட்டுள்ளது.குறித்த மையம் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டிருந்த நல்லூர் கல்வித்திணைக்கள வளாகத்திலிருந்து அறிவிப்பு பலகை தற்போது அகற்றப்பட்டுள்ளது.

2018 அக்டோபர் 18 ஆம் திகதி திறப்பு விழாவில் அப்போதைய முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மரபுரிமை மையத்தை திறந்து வைத்தார். ஆளுநர் தமிழ் மரபுரிமை மையத்தை அகற்றுவதற்காக பணிப்புக்களை விடுத்திருப்பதாக சொல்லப்படுகின்றது

யாழ்ப்பாணத்தில் உள்ள மத அமைப்பொன்று குறித்த காணிக்கான உரிமையினை வலியுறுத்தி வந்திருந்தது.குறித்த மத அமைப்பின் கோரிக்கையின் பேரிலேயே தற்போது கலாச்சார மையத்தை இழுத்துமூடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரியவருகின்றது.

குறித்த அமைப்பிற்கான தூண்டுதலை தமிழரசுக்கட்சி அரசியல் பிரமுகர்கள் சிலரே வழங்கியிருந்ததாக சொல்லப்படுகின்றது.

No comments