மகிந்த அணியின் வரவுசெலவுத்திட்டம் தோற்கடிப்பு

சிறிலங்கா பொதுஜன முன்னணியின் கட்டுப்பாட்டில் உள்ள சீதாவாக்கபுர நகரசபையின் வரவுசெலவுத் திட்டம் நேற்று தோற்கடிக்கப்பட்டுள்ளது.

சீதாவாக்கபுர நகர சபையில், பொதுஜன முன்னணிக்கு 11 ஆசனங்களும், ஐதேகவுக்கு 11 ஆசனங்களும், ஜேவிபிக்கு ஒரு ஆசனமும் உள்ளது.

இங்கு ஆட்சியமைத்துள்ள பொதுஜன முன்னணியின் சார்பில் நியமிக்கப்பட்ட நகரசபைத் தலைவர் ரணவீர நேற்று 2019ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தை முன்வைத்தார்.

வரவுசெலவுத் திட்டம் வாக்கெடுப்புக்கு விடப்பட்ட போது, சிறிலங்கா பொதுஜன முன்னணியின் 11 உறுப்பினர்கள் ஆதரவாகவும், ஐதேக மற்றும் ஜேவிபி உறுப்பினர்கள் 12 பேர் எதிராகவும் வாக்களித்து வரவுசெலவுத் திட்டத்தை தோற்கடித்தனர்.

கொழும்பு அரசியல் குழப்பங்கள், உள்ளூராட்சி சபைகளிலும் எதிரொலிக்கத் தொடங்கியிருக்கிறது.

No comments