மைத்திரியை கைவிட்டது மஹிந்த குடும்பம்?

னாதிபதி மைத்திரிபால சிறிசேன இரண்டாவது பதவிக்காலத்துக்காகப் போட்டியில் நிறுத்தப்படும் வாய்ப்புகள் இல்லை என்று கொழும்பு ஊடகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மைத்திரிபால சிறிசேனவை அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளராக நிறுத்தும் இணக்கப்பாட்டுடனேயே, கடந்த ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது.
எனினும், இரண்டாவது பதவிக்காலத்துக்காக மைத்திரிபால சிறிசேன போட்டியிடமாட்டார் என்று அவருக்கு நெருக்கமான தரப்புகளை மேற்கோள்காட்டி, ‘அனித்த” என்ற சிங்கள இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த ஒரு மாத காலத்தில் மைத்திரிபால சிறிசேனவின் செல்வாக்கு படுமோசமாக வீ்ழ்ச்சியடைந்துள்ளது. அவர் மீது பொதுமக்கள் ஆழ்ந்த அதிருப்தி கொண்டுள்ளனர்.
இந்த நிலையில், அவரை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவது பொருத்தமில்லை என்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் அமைப்பாளரான பஸில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அதேவேளை, மைத்திரிபால சிறிசேன தனது பதவிக்காலம் முழுவதும் பதவியில் இருக்க விரும்புகின்றார் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 பேர் அணியைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.
எனவே, விரைவில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் வாய்ப்பு இல்லை என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

No comments