மாவீரர் தினம் வேண்டாமாம்:மீண்டும் சிங்கள பிக்குகள் ?

வடக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாவீரர் தின நிகழ்வுகளை தடை செய்வதற்குரிய நீதிமன்ற உத்தரவைப் பெற்றுமாறு பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தரவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பௌத்த தகவல் கேந்திர நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அங்குளுகல்லே சிரிஜினாநந்த தேரர் பொலிஸ்மா அதிபரை நேரில் சந்தித்து இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்டுள்ள அங்குளுகல்லே சிரிஜினாநந்த தேரர்,
“நாட்டில் தீவிரவாத அமைப்பொன்றை நினைவு கூருவதற்கு சட்டத்தில் அனுமதியில்லை. எனவே, மாவீரர் தினம் என்பது அரசமைப்புக்கு முரணான ஒன்றாகும். கடந்த அரசில் சிலர் இதற்கு அங்கீகாரம் அளித்தனர். எனினும், தற்போது, மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதற்கு அனுமதியளிக்க முடியாதென பொலிஸ்மா அதிபரைச் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளோம்” – என்றார்.

No comments