வெள்ளைவான் படுகொலையாளி ரவீந்திரவை கைது செய்ய உத்தரவு


பாதுகாப்பு பிரதானி ரவீந்திர விஜேகுணவர்தனவை கைது செய்யுமாறு, கோட்டை நீதவான் ரங்க திஸாநாயக்க இன்று (02), உத்தரவிட்டுள்ளார்.

ரவீந்திர விஜேகுணவர்தனவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு, எதிர்வரும் 9 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. இதற்கு முன்னர் அவரை கைது செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

11 இளைஞர்களை கடத்திச் சென்ற காணாமலாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, முன்னாள் கமான்டர் சந்தன பிரசாத் எனப்படும் நேவி சம்பத்துக்கு அடைக்களம் கொடுத்தாரென, இவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments