புலிகளை விட யானைகள் ஆபத்தானவைபுலிகளை விட யானைகள் ஆபத்தானவை எனக் குறிப்பிட்டிருக்கும் பொதுஜன ஐக்கிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செஹான் சேனசிங்க புலிகளை வீழ்த்தியதை விட யானைகளை வீழ்த்தியமை தொடர்பில் மக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைவதாகவும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு தேவையான பாதுகாப்பை வழங்க தற்போதைய அரசாங்கம் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இன்று (02) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஒக்டோபர் 26 ஆம் திகதியின் பின்னர் ரணில் விக்ரமசிங்கவை முன்னாள் பிரதமராக ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை கடந்த அரசாங்கத்தின் போது எதிர்க்கட்சிக்கு செய்த நம்பிக்கை துரோகத்தை போன்று தற்போதைய அரசாங்கம் எந்த சந்தர்ப்பத்திலும் செய்யாது எனவும் ரணில் விக்ரமசிங்கவிற்கு தேவையான பாதுகாப்பை வழங்க தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments