மைத்திரி:வேதாளம் மீண்டும் முருக்கை மரத்தில்!


பிரதமராக ரணிலை நியமிக்க மாட்டேன் என்றும், இன்று நிறைவேற்றப்பட்ட பிரேரணையையும் உரிய மரபுகள் பின்பற்றப்படாததால் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்றும், வரும் நாட்களில் மகிந்த தரப்பினர் நாடாளுமன்றில் பெரும்பான்மையை காண்பிக்குமாறும் ஜனாதிபதி தங்களிடம் கூறியதாக, லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இன்று இலங்கை ஜனாதிபதியை சந்தித்த பின்னர் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதனிடையே ரணில் தமது ஐக்கிய தேசிய முன்னணியினருடன் ஜனாதிபதியை சந்திக்கவிருந்த போதும் , அந்த சந்திப்பு இரத்து செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

முன்னதாக சஜித்தை பிரதமராக்கும் உறுதி மொழியுடன் இன்றைய நம்பிக்கையில்லா பிரேரணையினை ஏற்றுக்கொள்ள மைத்திரி இணங்கியிருந்தார்.ஆனாலும் மஹிந்தவுடன் நடத்திய சந்திப்பினையடுத்து நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பான தமது நிலைப்பாட்டை ஜனாதிபதி மாற்றிக் கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதன் தொடர்ச்சியாகவே இன்றைய தினம் ரணில் தமது ஐக்கிய தேசிய முன்னணியினருடன் இன்று ஜனாதிபதியை சந்திக்கவிருந்த சந்திப்பு கைவிடப்பட்டுள்ளது.

No comments