புயல் ஓய்ந்த பின்னர் விடுமுறை:சப்பைக்கட்டு அதிகாரிகள்!


சீரற்ற வானிலை காரணமாக வடமாகாணத்தின் அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட பின்னர் வடக்கு ஆளுநர் விடுமுறை வழங்கிய விவகாரம் கடுமையான விமர்னசங்களை தோற்றுவித்திருந்தது.இந்நிலையில் அவசர பத்திரிகையாளர் சந்திப்பொன்றை அதிகாரிகளை வைத்து ஆளுநர் இன்று தனது அலுவலகத்தில் நடத்தியுள்ளார்.

வடமாகாண ஆளுநரின் செயலாளர் எல்.இளங்கோவன் ,வடக்கு கல்வி அமைச்சின் செயலாளர் சி.சத்தியசீலன் மற்றும் மாகாண கல்வி பணிப்பாளர் சகிதம் இந்த சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது.

புயல் அபாயத்தின மத்தியில் பாடசாலைக்கு காலை மாணவர்கள் சென்றிருந்த நிலையில் சிறிது நேரத்திலேயே விடுமுறை வழங்கப்பட்டுள்ளதான ஆளுநரின் அறிவிப்பையினையடுத்து மாணவர்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர்.

தீபாவளிக்கு முதல் நாள் விடுமுறை வழங்கி அதனை அறிவிக்க முடிந்த ஆளுநர் கஜா புயல் காரணமாக வடமாகாணத்தின் அனைத்து பாடசாலைகளுக்கும் உரியகாலத்தில் விடுமுறை வழங்க ஆர்வம் காட்டியிருக்கவில்லை.
மஹிந்தவிற்கு ஆதரவாக பேரணிக்கென பேரூந்துகளை விடுவிக்க தீபாவளியினை காரணமாக்கி விடுமுறை வழங்க முற்பட்ட ஆளுநர் தற்போது கஜா புயலினை காரணங்காட்டி விடுமுறை வழங்க அக்கறை கொள்ளவில்லை.

எனினும் காலை பாடசாலைகள் ஆரம்பித்த பின்பே விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகியதால் மாணவர்களும் பெற்றோர்களும் சௌகரியங்களை எதிர்நோக்கியதைக் காண முடிந்தது. வடக்கு மாகாண பாடசாலைகள் காலை 07.30 மணிக்கு ஆரம்பித்திருந்தன. எனினும் காலை 08 மணிக்கே உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்நிலையில் இன்றைய ஊடகவியலாளர்கள் சந்திப்பில் பங்கெடுத்த அதிகாரிகள் மாணவர்களது பாதுகாப்பு கருதி கஜா புயல் அனர்த்தம் முடிந்த பின்னர் விடுமுறை விடுத்ததை சமாளிக்க முற்பட்டிருந்தனர்.அதிலும் பரீட்சைகள் பின்னர் நடைபெறுமென அறிவித்த அவர்கள் இது விசேட விடுமுறையெனவும் தெரிவித்தனர்.

No comments