மகிந்த வலையில் வீழ்ந்த மைத்திரி
ரணில் விக்கிரமசிங்கவுடன் முரண்பட்ட நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியுடனான கூட்டரசிலிருந்து வெளியேறிய மைத்திரிபால சிறிசேன மகிந்தராஜபக்சவை பிரதமராக்கி சுந்திரக் கட்சியை ஒருங்கிணைக்க எழுத்த முயற்சி தவிடுபொடியாகியுள்ளது.

மைத்திரிபால சிறிசேனவால் மகிந்த ராஜபக்ச பிரதமராக்கப்பட்ட நிலையில் நாளுமன்றம் கலைக்கப்பட்டது. இந்நிலையில் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிலைச் சின்னத்திலா தாமரை மொட்டிலா போட்டியிடுவது என்பது தொடர்பில் சுதந்திரக் கட்சிக்குள் இழுபறி நிலை தோன்றியுள்ளதாக கூறப்பட்டுவந்தது.

இந்நிலையில் இன்று முன்னாள் எம்.பிக்கள் 50 பேருடன் சென்று மகிந்த ராஜபக்ச பொதுஜன பெரமுனவில் அங்கத்துவம் பெற்றுக்கொண்டமை கொழும்பு அரசியலில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் தாமரைமொட்டுச் சின்னத்தைக் கொண்ட சிறிலங்கா பொதுஜன பெரமுனவில் மகிந்த ராஜபக்ச தலையிலான அணி போட்டியிட்டிருந்தாலும் மகிந்த ராஜபக்ச உள்ளிட்டவர்கள் பொதுஜன பெரமுனவில் அங்கத்துவத்தைப் பெற்றிருக்கவில்லை. அவர்கள் சிறிலங்கா சுதந்திரக் கட்சியிலேயே அங்கத்துவம் பெற்றிருந்தனர். இந்நிலையில் இன்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து வெளியேறி மகிந்த தலைமையிலான அணியினர் பொதுஜன பெரமுனவில் அங்கத்துவம் பெற்றுள்ளனர்.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அவர்கள் சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் கூட்டணி அமைத்து பொதுஜன பெரமுனவின் தாமரைச் சின்னத்தில் போட்டியிடக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

No comments