
மாவீரர் நாள் நிகழ்வு யாழ்பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை (27) யாழ் பல்கலைக்கலைக்கழக வளாகத்தினுள் பொங்குதமிழ் நினைவுச் சின்ன திடலில் அமைக்கப்பட்ட மாவீரர் துயிலுமில்ல மாதிரிப் பகுதியில் தமிழீழ விடுதலைப் போரில் வீரச்சாவடைந்த அனைத்து மாவீரர்களுக்கும் வீரவணக்க நிகழ்வுகள் நடந்துள்ளன.

இந்நிகழ்வில் பல்கலைக்கழக மாணவர்கள், ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள், ஊழியர்கள் என பல்கலைக்கழக சமூகத்தினர் கலந்துகொண்டு வீரவணக்கம் செலுத்தியுள்ளனர்.
#Jaffna University
Post a Comment