வடக்கில் தொடங்கியது தேர்தல் ஓட்டம்!


தேர்தல் அறிவிப்பு வந்தவுடனேயே கூட்டமைப்பில் ஆசன ஆலோசனைகள் ஆரம்பித்துள்ளன.முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தேர்தல் கள நிலைவரம் தொடர்பில் இன்று தனது ஆதரவாளர்களுடன் சந்திப்பினை நடத்தியுள்ளார்.

முதலில் வடமாகாணசபை தேர்தலினை எதிர்பார்த்திருந்த நிலையில் அதனை முறியடித்து நாடாளுமன்ற தேர்தல் வந்து குதித்துள்ளது.

இதனால் கூட்டமைப்பு உட்பட பெரும்பாலான கட்சிகள் தயார் நிலையில் இல்லாதுள்ளன என்பதே கள யதார்த்தமாக உள்ளது.

கூட்டமைப்பினில் தற்போதுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கே இடம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ள போதும் சிவமோகன்,சார்ள்ஸ் நிர்மலநாதனை காய்வெட்ட திட்டமிட்டுள்ளதாக தெரியவருகின்றது.

அவ்வகையில் சிவமோகனிற்கு பதிலாக து.ரவிகரனும் சார்ள்ஸிற்கு பதிலாக வடமாகாண பிரதம செயலாளர் பத்திநாதரையும் களமிறக்க சுமந்திரன் சிபார்சு செய்துள்ளதாக தெரியவருகின்றது.

இதனிடையே அவ்வாறு வெளியேற்றப்பட்டால் வன்னியில் புதிய தேர்தல் களமொன்றை திறக்கவுள்ளதாக சார்ள்ஸ் தனது மாதாந்த ஊதியத்திட்டத்தின் கீழ் பணியாற்றும் உதவியாளர்களிடம் தெரிவித்துள்ளராம்.

யாழ்.தேர்தல் களத்தில் கூட்டமைப்பின் பட்டியலில் மாற்றமில்லாத போதும் கிளிநொச்சியில் தனது இருப்பினை தக்க வைக்க முன்னாள் முதலமைச்சருடன் பின்கதவு பேரமொன்றில் களமிறங்கியிருப்பதாக சொல்லப்படுகின்றது.

இந்நிலையில் குறுகிய கால அவகாசமே வேட்புமனு தாக்கல் செய்ய வழங்கப்பட்டுள்ள நிலையில் அடுத்துவரும் நாட்கள் பரபரப்பாகலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.

No comments