நாமலும் கட்சி தாவினார்!


உடன் அமுலுக்கு வரும் வகையில் தான் பொதுஜன பெரமுனவில் இணைந்துகொள்வதாக ஹம்பாந்தோட்டை மாவட்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இணைந்து முன்னெடுக்கும் கூட்டணியில் போட்டியிட்டு பொதுத் தேர்தலில் வெற்றி பெறுவது தனது எதிர்பார்ப்பு எனவும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் விசேட அறிவிப்பொன்றை விடுத்து கூறியுள்ளார்.
கடந்த உள்ளுராட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கு ஆரம்பிக்கப்பட்ட ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து கொள்வதில் இருந்த சிக்கல் நிலை நீக்கப்பட்டுள்ளளது.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் தெரிவான ஒருவர் இன்னுமொரு கட்சியில் அங்கத்துவம் பெற்றால், பாராளுமன்ற உறுப்புரிமை பறிபோகும் என்ற நிலைமை காணப்பட்டது.
தற்பொழுது பாராளுமன்றம் கலைக்கப்பட்டு விட்டதனால் அந்த தடை நீங்கியுள்ளது. கூட்டு எதிரணியில் இருந்த மஹிந்த ஆதரவு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் பொதுஜன பெரமுனவில் இணைந்து கொள்ள ஆரம்பித்துள்ளனர்.  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இதனை ஆரம்பித்து வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

No comments