அரசியல் மாற்றம்! வாய் திறந்தார் சம்பந்தன்!!

இரு நபர்களின் அடிப்படையில் முடிவு எடுக்க முடியாது. நாட்டின் கொள்கையின் அடிப்படையில் முடிவெடுக்க வேண்டும். கட்சிகளை பற்றி நான் சிந்திக்கவில்லை. எமது முடிவை நாம் ஆராய்ந்து எடுக்க வேண்டிய நேரத்தில் எடுப்போமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

நாட்டின் அரசியல் நிலைகுறித்து ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சம்பந்தன்,"இரு நபர்களின் அடிப்படையில் முடிவு எடுக்க முடியாது, நாட்டின் கொள்கையின் அடிப்படையில் முடிவெடுக்க வேண்டும்.

பாராளுமன்றின் பெரும்பான்மையை கருத்தில் கொண்டும் ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்களையும் கருத்தில் கொண்டே  எங்களது தீர்மானங்கள் அமையுமே தவிர தனி கட்சிகளைப் பற்றியோ தனி நபர்களைப் பற்றியோ நாங்கள் சிந்திக்கவில்லை

இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் பிரேரணை நிறைவேற்றப்பட்டது. அதற்கு தேசிய அரசாங்கம் இரண்டு தடவைகள் இணை அனுசரனை வழங்கியுள்ளது.

இவ்விடயங்கள் உட்பட ஏனைய விடயங்களையும் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளுடன் கலந்துரையாடிய பின்னர் எமது நிலைப்பாட்டை அறிவிப்போம்"  என தெரிவித்தார்.

No comments