அரசியல் கைதிகளிற்காக நெல்லியடியில் போராட்டம்!


தமிழ் அரசியல் கைதிகளது விடுதலையினை வலியுறுத்தி மக்களை விழிப்படைய செய்யும் போராட்டங்கள் தொடர்கின்றன.இன்று சனிக்கிழமையும் நெல்லியடி நகரில் அரசியல் கைதிகளது விடுதலையினை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.

ஆட்சி மாற்றத்தின் கீழ் மஹிந்த பிரதமராக பொறுப்பேற்ற பின்னர் இன்றைய நாளில் நடத்தப்பட்டுள்ள அரசியல் கைதிகளது விடுதலைக்கான போராட்டம் அனைத்து தரப்புக்களினதும் கவனத்தையீர்த்துள்ளது.

சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் ஏற்பாட்டில் அரசியல் கைதிகளது விடுதலை மற்றும் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இன்றைய ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே யாழ்ப்பாணத்தின் பல கிராமங்களிலும் மக்கள் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

No comments