முன்னாள் முதலமைச்சரை குறைகூறும் கூரே!


கடந்த ஐந்து வருடங்களாக வடக்கு மாகாண சபையின் முதலமைச்சராகவும், அமைச்சர்களாகவும் இருந்தவர்கள் அடையாளம் வேண்டும் , அதிகாரம் வேண்டும் என்று மட்டுமே பேசி வந்தார்கள்.அவர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அபிவிருத்தியை கொண்டு வருவதில் அதிக அக்கறை கொள்ளவில்லை என வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே தெரிவித்துள்ளார்.

வுடமாகாண முதலமைச்சரால் முன்வைக்கப்பட்ட நம்பிக்கை நிதியத்தை அங்கீகரிக்காது தடுத்து வைத்திருந்த ஆளுநர் என முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் ஆளுநர் ரெஜினோல்ட் கூரே மீது குற்றஞ்சுமத்தி வருகின்ற நிலையில் அவர் பதிலுக்கு முதலமைச்சரை விமர்சித்துள்ளார்.

கிளிநொச்சி அம்பாள்குளம் பகுதியில் அமைந்துள்ள விவேகானந்தா வித்தியாலயத்தில் இன்று (30) காலை நடைபெற்ற பரிசளிப்பு விழா நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய ஆளுநர் அதிகாரம் வேண்டும் அடையாளம் வேண்டும் என்று போராடும் அதே தருணத்தில் யுத்தத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அபிவிருத்தி கொண்டுவர முயலவேண்டும். அப்போது மக்களின் வாழ்வில் சுபிட்சம் நிலவும் என்று தெரிவித்தார்.

இந்த பிரதேசத்திலேயே மலையகத் தமிழர்கள் அதிகளவில் வாழ்கின்றார்கள். நானும் எனது தாய் தந்தையரும் மலையகத்தில் தேயிலைத் தோட்டத்திலே பணிபுரிந்தவர்கள் அம்மக்களின் வேதனை துக்கம் அனைத்தையும் சிறுவயது முதலே நான் நன்கறிந்தவன் அந்த வகையில் இங்கு வாழ்கின்ற மலையக தமிழ் மக்களின் மனநிலைகளை அறிந்து கொண்டுள்ளேன் இங்கே வாழ்ந்த இந்த மாணவர்களின் மக்களின் வளர்ச்சிக்காக என்னாலான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்க எண்ணியுள்ளேன்.

வடக்கு மக்களும் தென்னிலங்கை மக்களும் தமிழ் சிங்கள மக்களும் ஒற்றுமையாக இந்த நாட்டில் வாழ்வதற்குரிய வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதே எனது ஒரே ஒரே நோக்கம் என்றும் தெரிவித்துள்ளார்;.

No comments