இன்று மகிந்த அணிக்குத் தாவியவருக்கு சுற்றாடல் அமைச்சு


ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து இன்று மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த அணிக்குத் தாவியுள்ளார். இந்நிலையில் உடனடியாகவே அவருக்கு அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளது.

இரத்தினபுரி மாவட்ட ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் துனேஷ் கன்கந்த வே இவ்வாறு மகிந்த அணியில் இணைந்தநிலையில் சுற்றாடல் இராஜங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments