தொழிற்சங்க நடவடிக்கைக்கு ஆதரவு!
நவம்பர் 30ஆம் திகதி நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ள தொழிற்சங்க நடவடிக்கைக்கு ஆதரவளிக்க அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தீர்மானித்துள்ளது.
வரவு செலவுத் திட்டத்தில் மருத்துவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என GMOA குற்றஞ்சாட்டுகிறது.
மருத்துவர்களின் முக்கிய கோரிக்கைகள்
மருத்துவர்களுக்கான DAT கொடுப்பனவை முழுமையாக வழங்குதல்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் நிறுத்தப்பட்ட மேலதிக நேர மற்றும் விடுமுறை கொடுப்பனவுகளில் மூன்றில் ஒரு பகுதியை மீண்டும் வழங்குதல்.
DAT கொடுப்பனவுக்கு வரி விலக்கு வழங்குதல்.
தகுதியுள்ள மருத்துவர்களுக்கு வாகன வசதிகள் மற்றும் வரிச்சலுகையுடன் வாகன இறக்குமதி அனுமதி வழங்குதல்.

Post a Comment