கூட்டமைப்பு அவசரமாக நாளை கூடுகின்றது?

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுக்கூட்டம் நாளை கொழும்பில் அவசரமாக கூடவுள்ளது.

எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தனின் அலுவலகத்தில் கூடவுள்ள கூட்டத்தில் பங்கெடுக்க பங்காளிக்கட்சிகளது தலைவர்கள்,நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இதனிடையே செல்வம் அடைக்கலநாதன்,வியாழேந்திரன் மற்றும் துரைரெட்ணசிங்கம் உள்ளிட்ட மூவர் கனடா சென்றுள்ளதால் நாளைய கூட்டத்தில் 12 கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களே பங்கெடுக்கவுள்ளனர்.

இச்சந்திப்பின் தொடர்;ச்சியாக ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தியாவிற்கு அவசர பயணத்தை மேற்கொள்ளவுள்ளனர்.கொழும்பு குழப்பம் தொடர்பில் இந்தியாவின் ஆலோசனையினை பெற்றுக்கொள்ளவுள்ளதாக தமிழரசுக்கட்சி தலைவர் மாவை.சேனாதிராசா தெரிவித்துள்ள நிலையில் இந்திய பயணம் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது.எனினும் இதனை உறுதிப்படுத்த முடியாதுள்ளது.

இதனிடையே நாடாளுமன்றத்தை கூட்டுமாறு இதுவரை 126 நாடாளுமன்ற உறுப்பினர்களின் எழுத்துமூல கோரிக்கை சபாநாயகருக்கு அனுப்பட்டுள்ளதாகவும் ஓரிரு தினங்களில் சபாநாயகர் நாடாளுளுமன்றத்தை கூட்டுவார் என தான் எதிர்பார்ப்பதாகவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அதே வேளை மைத்திரி பக்கமிருந்த 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்திரிகாவின் அறிவுறுத்தலிற்கிணங்க மைத்திரியை விட்டு விலகி சுயாதீனமாக இயங்ககூடும் எனவும் கொழும்பு வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகிறது 

இந்நிலையில் நாடாளுமன்ற சபாநாயகர் கருஜெயசூர்யா , கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு அழைக்கப்பட்டு அங்கு பிரதி தூதுவர் உட்பட சிலருடனான சந்திப்புகள் நடைபெற்றிருந்தது .

நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்ட வேண்டும், ஜனநாயக சட்ட விழுமியங்கள் மதிக்கப்படவேண்டும் என சந்திப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

No comments