டாண் குடும்ப பெண்ணை பலிகொண்டது?


டாண் தொலைக்காட்சியினால் யாழில் நடத்தப்படும் சட்டவிரோத கேபிள் ரீவி இணைப்பின் ஊடாகப் பாய்ந்த மின்சாரம் தாக்கி குடும்பப் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் இந்தச் சம்பவம் நேற்று (28) முற்பகல் இடம்பெற்றது.

அதே இடத்தைச் சேர்ந்த இராசநாயகம் லீலாவதி (வயது-55) என்ற குடும்பப் பெண்ணே உயிரிழந்துள்ளார்.

கேபிள் ரீவி இணைப்பு வயரை அவர் பிடித்த போது, அதனூடாகப் பாய்ந்த மின்சாரம் தாக்கியதிலேயே குறித்த பெண் உயிரிழந்துள்ளார்.

முன்னதாக வடமராட்சியின் கரணவாய் பகுதியிலும் டாண் தொலைக்காட்சியின் கேபிள் மின்தாக்கி தந்தை மற்றும் மகன் இருவர் உயிரிழந்திருந்தனர்.

எனினும் அரசியல் பின்புலத்தில் இக்கொலை விவகாரம் மூடி மறைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

No comments