விரைவில் மாகாணசைபத் தேர்தல் - ஜனாதிபதி தெரிவிப்பு


மாகாண சபை தேர்தல் மிக விரைவில் நடாத்தப்படுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

திஸ்ஸமஹாராமவில் இன்று (29) நடைபெறும் பெரும்போகத்திற்கான பயிர் செய்கை நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் தேசிய நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி, தேர்தல் ஆணைக்குழுவுடன் பேச்சுவார்தைகளை நடத்தி, மாகாண சபை தேர்தல்களை மிக விரைவில் நடாத்தப்படுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க உள்ளதாக தெரிவித்தார்.

இதேவேளை, வடக்கு மக்களுக்கான வீடமைப்பு திட்டங்களை முன்னெடுப்பதற்கு வௌிநாட்டு முதலீடுகள் கிடைக்கப்பெற்ற போது கடந்த 4 வருட காலப் பகுதியில் அது தொடர்பில் அமைச்சரவையில் பேச்சுவார்த்தைகள் மட்டுமே இடம்பெற்றதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

No comments