முதலமைச்சர் நிதியத்தை கூட மீட்டெடுக்க மறுத்த கூட்டமைப்பு?

வடமாகாண முதலமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட முதலமைச்சர் நிதியம் கடந்த ஒருவருடமாக சட்டமா அதிபரது ஆலோசனைக்காக காத்திருக்கின்றது.அதனை பற்றி அதிகம் கதைக்கின்ற சுமந்திரனோ,ஏன் சம்பந்தனோ அல்லது ஏனைய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களோ வாயே திறப்பதில்லை.ஆனால் வடமாகாணசபை வினைத்திறனற்று செயற்படவில்லையென குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதில் முன்னிற்கு நிற்பதாக சுரேஸ்பிறேமச்சந்திரன் குற்றஞ்சுமத்தியுள்ளார்.

இதனிடையே அண்மைக்காலங்களில் வடக்கு மாகாணசபை தோல்வி அடைந்த சபை என்றும் விக்னேஸ்வரன் அதை பிழையாக வழிநடத்துகிறார் என்றும் அபிவிருத்திகளை அது பெற்று கொடுக்க வில்லை என்றும் தமிழரசு கட்சி பேச்சாளர் சுமந்திரன் கருத்து சொல்லி வருகிறார் .இவரை போல தமிழரசு கட்சி தரப்புக்கள், புலி எதிர்ப்பு கும்பல்கள் , இலங்கை அரசு , மகிந்த கூட்டாளிகள் என பலரும் கதை சொல்லுகின்றனர் . வடமாகாணசபைக்கு ஒதுக்கும் நிதி திரும்புவதாக கூட எழுதுகின்றனர் . வடமாகாணசபையில் இனப்படுகொலை தீர்மானம் நிறைவேற்ற பட்ட பிற்பாடு இந்த கருத்தை உண்மையாக்க பலரும் முயற்சிக்கின்றனர் .

அரசாங்கம் இந்த ஆண்டு எவ்வாறு மாகாணசபைக்கு நிதி ஒதுக்கீட்டில் தடை ஏற்படுத்தியது என்பது இதற்க்கு மிக சிறந்த ஒரு உதாரணம் வெளியாகியுள்ளது. இந்த ஆண்டு மத்திய அரசாங்கம் மாகாண அரசுக்கு ஒதுக்கிய நிதி 3,630 மில்லியன் ரூபா .இதில் மூலதன நன்கொடையாக 551 மில்லியன் ரூபாவும் மாகாண குறிக்கப்பட்ட நிதியாக 3,081 மில்லியனும் அடங்கும் .அனால் வருடம் முடிய இன்னும் 2 மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில் 1,450 மட்டுமே விடுவிக்கப்பட்டு இருக்கிறது .மீதி 2,180 மில்லியன் விடுவிக்க படவில்லை .இதை மத்திய அரசிடம் பெற்று கொடுத்து இருக்க வேண்டிய கூட்டமைப்பு தலைமை மத்திய அரசோடு சேர்ந்து மாகாணசபையை முடக்க முற்படுகின்றது.

இந்த அடிப்படையில் மாகாண நிதி திரும்பும் என கேட்டால் யாரும் பதில் சொல்லுவதில்லை . உண்மையில் முதலாவது மாகாணசபை தமிழரசு தலைமை, சுமந்திரன் தரப்பின் முட்டுக்கட்டை, ஆளுநர் தலையீடு , மத்திய அரசின் கெடுபிடிகள் , நிதி ஒதுக்கீடு நெருக்கடிகளை எதிர் கொண்டு சிறப்பாக பணியாற்றி இருக்கிறது .குறிப்பாக அம்மாச்சி உணவகத்திற்கு பெயர் வைக்க கூட மத்திய அரசு அனுமதிக்கவில்லை . மறுபுறம் சுமந்திரன் கும்பல்கள் முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கை இல்லாப்பிரேரணை ,முதலமைச்சர் நிதியத்திற்கு மத்திய அரசு ஏற்படுத்திய தடைகள் , பொருளாதார வளையத்திற்கு மத்திய அரசு மற்றும் சுமந்திரன் கும்பல்கள் ஏற்படுத்திய தடைகள் , கடல் நீர் திட்டத்தை சுமந்திரன் கும்பல்கள் சீரழித்தமை என பல நெருக்கடிகளை எதிர் கொண்டது .வழக்குகள் கூட போடப்பட்டன .இருந்தாலும் தன்னால் முடிந்த பணிகளை அது செய்து இருக்கிறது ..இதற்க்கு அவர்க்ளின் நிதி அறிக்கைகள் சாட்சியாகும். ஆளுநர் அதிகாரத்தின் கீழ்; ராணுவ தேவைக்கு என கோடிக்கணக்கான பணம் கொள்ளையடிக்க பட்ட நிலையில் வட மாகாணசபை இலங்கையின் மாகாணசபைகளில் நிர்வாக ரீதியில் சிறப்பான மாகாணசபை என மத்திய அரசின் அனைத்து விருதுகளையும் கடந்த சில ஆண்டுகளாக பெற்று வருவது இன்னும் ஒரு சான்று என அவதானிகளால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments