யார் போலித் தேசியவாதிகள் ?


தமிழ்த்  தேசியவாதம் பற்றியோ தமிழ்த் தேசியவாதிகள் பற்றியோ கதைப்பதற்கு சயந்தனுக்கும் சுமந்திரனுக்கும் என்ன யோக்கிதை இருக்கிறது என ஈபிஆர்எல்எவ் கட்சித் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

சமகால அரசியல் நிலமைகள் குறித்து இன்று யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே
சுரேஸ் பிறேமச்சந்திரன் மேற்கண்டவாறு கூறியிருந்தார். இதன்போது மேலும் அவர் கூறுகையில்,

அண்மையில் நிகழ்வொன்றில் வடக்கு மாகாணசபை உறுப்பினர் சயந்தனும் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும் போலித் தேசியவாதிகள் தொடர்பில் தமிழ் மக்கள் விழிப்புடன் இருக்கவேண்டும் எனக் கூறியிருக்கின்றனர்.

யார் போலித் தேசியவாதிகள் என்பது மக்களுக்கு நன்றாகத் தெரியும். சயந்தன் வடக்கு மாகாணசபையில் முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவருவதிலும் சபையைக் குழப்புவதிலும் முதலமைச்சருக்கு தொடர்ச்சியாக குடைச்சல் கொடுப்பதையும் தவிர மக்களுக்கு என்ன செய்தார்.

சுமந்திரன் ஆயுதப் போராட்டத்தை நிராகரித்தவர். அவருக்கு தமிழ்த் தேசியப் போராட்டம் தொடர்பில் எதுவும் தெரியாது. அக்காலப்பகுதியில் அவர் தேவாலயங்களில் மதப்பிரச்சாம் செய்துகொண்டு திரிந்தவர். மதப்பிரச்சாரம் செய்வது தவறானது எனக் கூறவில்லை. அவர் அக்காலத்தில் தமிழ்த் தேசியம் போராட்டம் தொடர்பில் சிந்தித்திருக்கவில்லை.

இவர்கள்தான இன்று தமிழ்த் தேசியம்பற்றிக் கதைக்கிறார்கள். இவர்களுடன் இணைந்து ஒரு முஸ்லீம் மாகாணசபை உறுப்பினரும் தமிழ்த் தேசியம் பற்றிக் கதைப்பது வேடிக்கையானது என்றார்.

No comments