மோடி அவசரம்:ஓடுகின்றார் ரணில் டெல்லிக்கு!


இலங்கை ஜனாதிபதி மைத்திரியை இந்திய றோ மூலம் தன்னை படுகொலை செய்ய முயன்றதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீது குற்றச்சாட்டுக்களை வைத்துள்ள நிலையில் இன்று (18) உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ரணில் இந்தியாவுக்கு செல்லவுள்ளார். 

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று மாலை இந்தியாவுக்கு புறப்பட இருப்பதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ரணில் விக்கிரமசிங்கவின் இந்திய விஜயத்தின் போது இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் உயர் மட்ட சந்திப்பையும் நடத்தவுள்ளார்.

இந்த சந்திப்பு புதுடில்லியில் இந்த மாதம் 20 ஆம் திகதி நடைபெறவிருக்கின்றது என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்திய விஜயத்தின் போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் சிரேஷ்ட அரசியல்வாதிகளுடனும் சந்திப்பு நடத்த உள்ளார்.

இந்திய விஜயத்தின் போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன், அமைச்சர்களான சாகல ரத்னாயக்க, மலிக் சமரவிக்ரம, அர்ஜுன ரணதுங்க மற்றும் பிரதமர் அலுவலகத்தின் அதிகாரிகளும் பங்கேற்கவுள்ளனர்.

நேற்று மைத்திரியுடன் நேரடியாக இந்திய பிரதமர் மோடி தொலைபேசி வழி பேசியிருந்த நிலையில் அவசர அவசரமாக ரணில் இந்தியாவிற்கு அழைக்கப்பட்டுள்ளமை பரபரப்பினை தோற்றுவித்துள்ளது. 

No comments