கிழக்கில் பரவலாக சுவரொட்டிகள் !சகல அரசியல் கைதிகளையும் உடனே விடுதலை செய் எனவும், பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை உடனே இரத்துச் செய் எனவும், மேலும் அடக்குமுறை சட்டங்கள் வேண்டாம் எனவும் வலியுறுத்தும் வகையில் அச்சிடப்பட்ட சுவரொட்டிகள் கிழக்கில் ஒட்டப்பட்டுள்ளன.

சம உரிமை இயக்கம் எனும் பெயரில் மட்டக்களப்பு நகர், மஞ்சந்தொடுவாய், ஊறணி, நாவற்குடா போன்ற இடங்களில் இவ்வாறான வசனங்கள் பொறிக்கப்பட்ட சுவரொட்டிகள் மதில் சுவர்களிலும், பொது இடங்களிலும் ஒட்டப்பட்டுள்ளன.

அரசியல் கைதிகளின் விடுவிப்பு தொடர்பில் வடக்கு, கிழக்கில் போராட்டங்கள் இடம்பெற்றுவரும் நிலையில், இவ்வாறான கருத்துகள் அடங்கிய துண்டுப்பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments