அரசியல் கைதிகளிற்காக புறப்படுகின்றது நடைபயண பேரணி!

தமிழ் அரசியல் கைதிகளது விடுதலைக்காக மீண்டும் யாழ்.பல்லைக்கழக மாணவ சமூகம் களமிறங்குகின்றது.எதிர்வரும் 8ம் திகதி திங்கட்கிழமை அடையாள கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுக்க திட்டமிட்டுள்ள யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தொடர்ச்சியாக கவனயீர்ப்பு நடைபயணமொன்றையும் ஆரம்பிக்கவுள்ளது.

எதிர்வரும் செவ்வாய்கிழமை யாழ்.பல்கலைக்கழகத்திலிருந்து புறப்படுகின்ற கவனயீர்ப்பு நடைபயணம் ஏ-9 வீதியினூடாக அனுராதபுரம் சிறையினை சென்றடையவுள்ளது.

குறித்த நடைபயணத்தில் பல்கலைக்கழக மாணவர்கள்,மாணவிகள் இணைந்து பயணிக்கவுள்ள நிலையில் வீதியெங்கும் அவர்களுடன் அரசியல் தலைவர்கள்,பொது அமைப்புக்கள்,மதத்தலைவர்கள் என பலரும் இணைந்து பயணிக்க அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக முன்றலில் ஆரம்பமாகும் குறித்த நடைபயண பேரணி முக்கிய நகரங்கள் தோறும் மக்களை அணிதிரட்டுவதில் ஈடுபடவுள்ளது.

இதனிடையே கடந்த மாதம் 14ம் திகதி முதல் அனுராதபுரம் சிறையில் உணவுதவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ள அரசியல்கைதிகளுடன் தற்போது மகசீன் சிறைச்சாலையிலுள்ள அரசியல் கைதிகளும் இணைந்து போராட்டத்தை தொடர்கின்றனர்.

கடந்த ஆண்டிலும் அரசியல் கைதிகளது போராட்டம் முன்னெடுக்கப்பட்டபோது யாழ்.பல்கலைக்கழக சமூகம் பெருமெடுப்பில் திரண்டு ஆதரவு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

No comments