Header Shelvazug

http://shelvazug.com/

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்கங்கள் பணிப்பகிஷ்கரிப்பு


இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்கங்கள் சில இன்று (29), பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ளன.

தெமடகொடயில் அமைந்துள்ள இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைமையக வளாகத்தில், ​நேற்று (28) நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தைக் கண்டித்தே, இந்தப் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுகின்றது.

மேலும், சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற அர்ஜூன ரணத்துங்கவை கைது செய்யும்வரை பணிப்பகிஷ்கரிப்பு தொடரும் என, இலங்கை சுதந்திர தொழிலாளர் சங்கத்தின் பிரதித் தலைவர் கே.ஜே. பிரேமாந்த குறிப்பிட்டுள்ளார்.