பலாலி விமான நிலைய புனரமைப்பு தாமதப்படுத்தும் நிதி அமைச்சு


பலாலி  வானூர்தித்தளத்தின்  ஆரம்ப அபிவிருத்தி பணிகள் சிவில் வானூர்தி திணைக்களம் முன்னெடுப்பதற்காக ஆயிரம் மில்லியன் ரூபா நிதி ஒதுக்கிடப்பட்டிருந்தது.

இது தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்துக்கு நிதி அமைச்சின் அவதானம் இன்னமும் கிடைக்கப்பெறவில்லை. இதனால் அபிவிருத்திப் பணிகள் ஆரம்பிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

பலாலி வானூர்தித் தளத்தை பிராந்திய வானூர்தி நிலையமாக தரமுயற்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. உடனடியாக ஆரம்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. உடனடியாக அந்தப் பணிகளை ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டது. ஆரம்பத்தில் இந்தியா ஊடாக இதனைச் செய்ய தீர்மானிக்கப்பட்டிருந்தாலும் தற்போதுள்ள நிலையிலிருந்து பிராந்திய வானூர்திச் சேவையை ஆரம்பிக்கும் அளவுக்கான அபிவிருத்திப் பணிகளை மாத்திரம் இலங்கை சிவில் வானூர்தித் திணைக்களம் முன்னெடுக்க முடிவு செய்யப்பட்டது.

இதற்காக ஆயிரம் மில்லியன் ரூபா நிதி ஒதுக்கிடப்பட்டது. சுற்றுலாத்துறை அமைச்சு, சிவில் வானூர்திப் போக்குவரத்து அமைச்சு, தலைமை அமைச்சரின் அமைச்சு ஆகிய மூன்றும் இணைந்து இந்த அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பித்திருந்தன. பொதுவில் அமைச்சரவைப் பத்திரங்களுக்கு நிதி அமைச்சின் அவதானம் பெறப்பட்டே அனுமதி வழங்கப்படும். அதனடிப்படையில் பலாலி வானூர்தித் தளஅபிவிருத்தி அமைச்சரவைப் பத்திரமும் நிதி அமைச்சின் அவதானத்துக்காக கையளிக்கப்பட்டுள்ளது.

25 இற்கு மேற்பட்ட அமைச்சரவைப் பத்திரங்கள் நிதி அமைச்சில் உள்ளதால் பலாலி அபிவிருத்திக்குரிய அமைச்சரவைப் பத்திரத்துக்கு அவதானம் வழங்குவது தாமதமடைவதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments