கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் துண்டுவிரித்தது தமிழரசுக்கட்சி



தமிழீழ மாவீரர்கள் நாள் நவம்பர் மாதம் 27ம் திகதி நினைவு கூரப்படவுள்ள நிலையில் கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் தனது அரசியல் நடவடிக்கையை தமிழரசுக் கட்சி ஆரம்பித்துள்ளது.

கடந்த ஆண்டு துயிலும் இல்லங்களை பொதுமக்கள் துப்பரவு செய்து மாவீரர் தின நிகழ்வுகளை மேற்கொண்டிருந்தனர்.

இந்நிலையில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளை யாழ் மாநகரசபை ஊடக நடத்த முனைந்த தமிழரசுக்கட்சி இரு மாதங்கள் உள்ள நிலையில் மாவீரர் துயிலும் இல்லங்களை நோக்கி தனது பார்வையைத் திருப்பியுள்ளது.

இதன் முதல் நடவடிக்கையாக தமிழ்தேசிய கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட பி ரதேச சபை உறுப்பினர்கள், கட்சி உறுப்பினர்கள் இணைந்து கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தை ஆக்கிரமித்துள்ளனர்.

மாவீரர் துயிலுமில்லங்களைக் கைப்பற்றி மாவீரர் நினைவேந்தல்களை நடத்தினால் வரும் மாகாணசபைத் தேர்தலில மக்கள் தமக்கு வாக்களிப்பார்கள் என்ற நப்பாசையே அரசியல் கட்சிகள் மாவீரர்களை நினைவுகூரலை குத்தகைக்கு எடுக்க முனைவதற்கு காரணம் என்பது தெரிந்ததே.

No comments