கத்தி முனையில் பெண்போராளியை விரட்டிய அதிகாரி?

முன்னாள் போராளியும் ,ஈழ விடுதலைக்காக மூன்று மாவீரர்களின் சகோதரியுமான இளம் தாயொருவர் பிரதேசசெயலக அதிகாரியால் கொலை
அச்சுறுத்தலிற்குள்ளாகியுள்ளார்.

கிளிநொச்சி திருநகரில் வசித்து வரும் இரு பிள்ளைகளின் தாயான எழில்வேந்தன் புவனேஸ்வரி என்பவரையே தனது இருப்பிடத்திலிருந்து வெளியேறுமாறு கிளிநொச்சி மாவட்ட கரைச்சி பிரதேச செயலக நில அலுவலரால் கொலை அச்சுறுத்தல் விடுத்து மிரட்டப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
''வீரச்சாவடைந்த உனது சகோதரங்கள் புதைத்த நிலத்தில் இருந்து எழுந்து வந்த பின்னர் கதைக்கிறேன்'' என்று தெரிவித்து  கிளிநொச்சி மாவட்ட கரைச்சிப் பிரதேச அரச காணி உத்தியோகத்தர், இருதய நோயாளியான முன்னாள் பெண் போராளியிற்கு கொலை அச்சுறுத்தல் விடுத்ததாக தெரியவருகின்றது.

குறித்த காணியிலிருந்து வெளியேற வலியுறுத்தி அவரது பிள்ளைகளை தன்னுடன் கூட்டிவந்த அடியாள்களினை பயன்படுத்தி கத்தி முனையில் வைத்துக்கொண்டு மிரட்டியுள்ளார். அத்துடன் அவரது வீட்டை அடியாட்களைக் கொண்டு அடித்து நொருக்கி அட்டகாசம் புரிந்துள்ளார். தற்போதைய மழை மத்தியில் பாதிக்கப்பட்டு தெருவில் நிற்கும் முன்னாள் பெண்  போராளியையும் குழந்தைகளையும் எவரும் திரும்பிப்பார்க்கவில்லையென குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.

No comments