நியூசிலாந்தில் இடம்பெற்ற தமிழீழ பெண்கள் எழுச்சி நாள்!


நந்தினி உதயசோதி அவர்களால் ஈகைச் சுடரனது ஏற்றப்பட நிகழ்வுகள் யாவும் ஆரம்பமானது. நியூசிலாந்து வாழ் தமிழீழ மக்களால் அகவணக்கத்துடன் மலரஞ்சலியும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது .

தொடர்ந்து நியூசிலாந்து தமிழர் இளையோர் அமைப்பின் சார்பில் லக்சன் அவர்களின் பேச்சு இடம்பெற்றது. செல்வி அனனியா ரவிச்சந்தர் அவர்களால் கவிதை உணர்வு பூர்வமாக உரைக்கப்பட்டது.


அமல் அவர்களால் மாலதி பற்றிய பதிவு சார்ந்த சிறப்புரை இடம்பெற்றது. பின்னர் சிவராமன் சிவஞானம் அவர்களால் அன்னை பூபதி பற்றிய பேச்சு உரைக்கப்பட்டது.
தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் பொறுப்பாளர் தாயகரன் அவர்களால் பெண்கள் எழுச்சி பற்றிய பேச்சு இடம்பெற்றது.
இத்துடன் தமிழீழ பெண்கள் எழுச்சி நாள் நிகழ்வுகள் அனைத்து முடிவுக்கு வந்தது.
Post a Comment