கருணாவுக்கும், கேபிக்கும் சொகுசு வாழ்க்கை! போராளிகளுக்கு சிறையா? முன்னாள் போராளி ஆவேசம்!

கிழக்கில் விடுதலைப் புலிகளின் படைகளுக்கு தளபதிகளாகவிருந்து கட்டளைகளை இட்டவரான கருணா அம்மான் மற்றும் விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்கள் கே.பி போன்றோர் இன்று அரசாங்கத்தின் சலுகைகளுடன் சுகபோக வாழ்கை வாழ்ந்து வரும் நிலையில் கட்டளைகளை கேட்டு செய்த போராளிகள் இன்று சிறைகளில் அடைத்து வைத்திருப்பது என்ன நியாயம்? எனப் விடுதலைப் புலிகளின் அமைப்பின் முன்னாள் போராளியும் புனர்வாழ்வு பெற்றவருமான குட்டிமணி என்பவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

நேற்று சனிக்கிழமை அம்பாறையில் தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி நடத்தப்பட்ட பேரணியில் கலந்துகொண்டு இறுதியில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கும் போதே அவர் இக் கேள்வியை கேட்டுள்ளார்.

என்னுடைய பெயர் குட்டிமணி. நான் ஒரு முன்னாள் போராளி. 5 வருடங்களாக கொழும்பில் சிறையில் இருந்து புனர்வாழ்வு பெற்று வெளியில் வந்துள்ளேன்.

என்னோடு சிறையில் இருந்தவர்கள் தான் அனுராதபுர சிறையில் உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நான் வெளியில் வந்து 5 வருடங்கள் முடிந்துவிட்டது. அவர்கள் இன்னும் இருக்கிறார்கள். அவர்களின் மனநிலை மிகவும் பாதிக்கபடும். அங்குலம் அங்குலமாக யோசித்து கொல்லபட்டுக்கொண்டே இருப்பார்கள்.

நானும் முள்ளிவாய்காலில் இராணுவத்தினரிடம் சரணடைந்து 5 வருடங்கள் சிறையில் இருந்து புனர்வாழ்வு பெற்று வந்ததால் எனக்கும் சிறைவாழ்க்கையில் கடினம் பற்றி எனக்கும் தெரியும்.

நாங்கள் சரணடையும் முன்னர் மகிந்த அரசாங்கம் அறிவித்தது சரணடைபவர்கள் 6 மாதங்களில் புனர்வாழ்வு பெற்று குடும்பங்களுடன் இணைந்து வாழலாம் என்று.

இன்றைக்கு நீங்கள் யோசித்துப் பாருங்கள், கருணா அம்மான் என்பவர் அம்பாறை - மட்டக்களப்பில் படைகளை வழி நடத்தியவர். அவர் மன்னிக்கப்பட்டு சொகுசு வாழ்க்கையுடன், சொருசு வாகனத்துடனும் திரிகிறார். அவரின் கதையைக் கேட்டு சண்டை பிடித்த போராளிகள் இன்றும் விடுதலை செய்யாமல் இந்த அரசாங்கம் வைத்திருக்கின்றது என்பது கண்டிக்கத்தக்கது.

இதேபோல இந்த விடுதலைப் போராட்டத்திற்கு ஆயுதங்களை வழங்கிய கேபி என்று அழைக்கப்படும் பத்மநாதன் என்பவர் இங்கே சுகபோகமாக வாழ்ந்து வருகிறார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைத்திகள் விடயத்தில் அதிக அக்கறை எடுக்கவில்லை. நாங்கள் கைதியாக இருக்கும் போதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏதோ தானோ என்று தான் பார்த்துக் கொண்டிருந்தது.

அதாவது நாங்கள் 12 ஆயிரம் போராளிகளும் கைத்திகளாக இருக்கும் போது, இந்த அரசியல்வாதிகள் எங்களை விடுவிக்க எந்தவித ஆக்கபூர்வ நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. இதனால் நாங்கள் மிகவும் கடினப்பட்டு இருந்தநாங்கள்.

விசாரணை இன்றி சிறைக்குள் வாடும் இந்த தமிழ் அரசியில் கைதிகள் உடனடியாக விடுதலை செய்ப்பட வேண்டும். கைதிகளும் பந்தபாசம் உணர்வுகள் கொண்டவர்கள் அவர்களும் தமது குடும்பங்களுட்ன் தாய், தந்தை, மனைவி, குழந்தைகளுடன் இறுதி காலத்தை மகிழ்சியாக வாழ்வதற்கு இந்த நல்லாட்சி அரசாங்கம் சந்தர்ப்பத்தினை வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம் என குட்டிமணி மேலும் தெரிவித்துள்ளார்.


No comments