திறைசேரி நிதி ஒதுக்கவில்லை:திண்டாடுகின்றது வடக்கு?

வடக்கு மாகாணசபைக்கு ஒதுக்கப்பட்ட நிதி அதன் திறனற்ற செயற்பாட்டால் செலவழிக்கப்படாது ஆளுனரிடம் உள்ளதாக தமிழரசு நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ள நிலையில் மத்திய திறைசேரி நிதி ஒதுக்காததையடுத்து வடமாகாணசபை திண்டாடிவருகின்றது.

நடப்பாண்டிற்கு ஒதுக்கப்பட்டதாக அரசு அறிவித்த 3630 மில்லியன் ரூபா நிதியில் 1450 மில்லியன் ரூபா மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ளது. நிதியாண்டு முடிவுறுவதற்கு இருமாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் 2180 மில் ரூபா இன்னும் விடுவிக்கப்படவில்லையென வடமாகாண திறைசேரி அறிவித்துள்ளது.

இந்நிலையில் தற்போது பெரும்பிரயத்தனத்தின் மத்தியில் 50 மில்லியனை மத்திய திறைசேரி விடுவித்துள்ளதாக அறியமுடிகின்றது.

இதனிடையே நடந்து முடிந்த பெருமளவிலான வேலைகளி;ற்கான நிதியை அரசு ஒதுக்கி வழங்காமையால் தொடர்ந்து வேலைகளை முன்னெடுக்க ஒப்பந்த நிறுவனங்கள் மறுதலித்துள்ளன.இதனால் பெரும் தேக்கநிலையேற்பட்டுள்ளது.

இதனிடையே இனிவரும் ஆளுனர் ஆட்சியில் அனைத்தையும் அடைவோமென தற்போது ஆளுநருக்கு முகவராக செயற்படும் சுந்தரம் டிவகலாலா அறிவித்துள்ளார்.

ஆளுனர் செயலக அதிகாரியான அவர் விடுத்துள்ள அறிவிப்பு மத்திய அரசின் திறைசேரி நிதி விடுவிப்பினை செய்யாதிருப்பதற்கும் முதலமைச்சர் மீதான சேறுபூசலிற்கும் தொடர்புகள் இருப்பதாக சந்தேகிக்கப்படுகின்றது.

No comments