வரலாறு தெரியாத சுமந்திரன் போன்ற அல்லக்கைகள் கூக்குரல்:மனோ சீற்றம்


தமிழ் தேசிய போராட்ட வராலாறு தெரியாத சிலர் இப்போது எனக்கு எதிராக கூச்சலிடுகின்றனர்.அவர்கள் எல்லாம் தெரிந்தவர்கள்,எல்லாம் அறிந்தவர்கள் என்ற பாணியில் செயற்படவேண்டாமென பொது அரங்கில் வைத்து கேட்டுள்ளார் அமைச்சர் மனோகணேசன்.

இன்று புதன்கிழமை யாழ்.ஊடக அமையத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த அவர் மேலும் தெரிவிக்கையில் நான் அனைவரிற்குமே தோழன்,நண்பன்.என்னுடன் எவரும் தொடர்பு கொள்ளலாமென தெரிவித்த அவர் கடந்த மூன்று வருடங்களாக கிடப்பிலிருந்த வடகிழக்கிற்கான வீடமைப்பு திட்டம் தொடர்பில் வாய்மூடியிருந்தவர்கள் என்னிடம் கடந்த இரண்டு மாதங்களிற்கு முன்னரே கிடைத்த வீடமைப்பு திட்டம் பற்றி இப்போது குத்தி முறிகின்றார்கள்.

அமைச்சர் சஜீத் பிரேமதாசா முன்னெடுப்பது மாதிரி வீடமைப்புத்திட்டம்.அவர் தனது தந்தை காலம் முதல் கிராமங்களை தெரிவு செய்து அங்கு 5 இலட்சம் அரச நிதி உதவியுடன் பயனாளிகளது பங்களிப்புடன் 25 வரையிலான வீடுகளை அமைப்பதே அந்த திட்டம்.

தற்போது என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள வீடமைப்பு 15 இலட்சம் நிதி உதவியில் மக்கள் தத்தமது காணிகளில் வீடுகளை கட்டிக்கொள்வதாகும்.இது யுத்தத்தில் அனைத்தையும் இழந்த மக்களிற்கான விசேடமாக வடகிழக்கிற்கான வீடமைப்பு திட்டமாகும்.

இதனை நான் முன்னெடுப்பதா அல்லது அமைச்சர் சுவாமிநாதன் முன்னெடுப்பதாவென்பதை ஜனாதிபதி மற்றும் பிரதமரே தீர்மானிப்பார்களன்றி வரலாறு தெரியாது கூக்கிரலிடும் அல்லக்கைகள் அல்லவெனவும் மனோ கணேசன் தெரிவித்தார்.

வடகிழக்கு மக்களிற்கும் எனக்குமான உறவு  இரத்த சம்பந்தமானது.இதனை இடையில் வந்த எந்தவொருவரும் பிரிக்கமுடியாதெனவும் மனோகணேசன் சுட்டிக்காட்டியிருந்தார்.

கடந்த வாரம் நடைபெற்ற சஜித் பிரேமதாசாவின் வீடமைப்பு திட்ட நிகழ்வொன்றில் வடகிழக்கிற்கான வீடமைப்பு திட்டத்தை மனோகணேசனிடமிருந்து பறித்து சஜித் பிரேமதாசாவிடம் கையளிக்க பொது மேடையில் சுமந்திரன் ஆலோசனை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments