மன்னார் புதைகுழி:நாஜி பாணி படுகொலையா?


மன்னார் 'சதொச” விற்பனை நிலைய வளாகத்திலிருந்து இதுவரை 175 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் நச்சுப்புகையூட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருக்கலாமென சந்தேகிக்கப்படுகின்றது. 

'சதொச” விற்பனை நிலைய வளாகத்தில் இன்று (10), 84 ஆவது தடவையாக அகழ்வு பணிகள் இடம் பெற்றது. 

இதுவரை குறித்த வளாகத்தில் 175 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அவற்றில் 169 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டு மன்னார் நீதிமன்றத்தின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது. ஏனைய அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளை மீட்கும் பணிகள் இடம்பெறுகின்றது.

மேலும் மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ள நிலையில் அவை காபன் பரிசோதனைக்கு உட்படுத்துவதுக்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன என தெரியவருகின்றது.

குறித்த காபன் பரிசோதனையின் ஊடாக கொல்லப்பட்ட காலப்பகுதியை கண்டறிய முடியுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

இதனிடையே சடலங்களிலிருந்து எந்தவொரு ஆடை அணிகலன்களோ மீட்கப்படாமையால் அனைவரும் நிர்வாணமாக கொண்டுவரப்பட்டு கொல்லப்பட்டுள்ளமை அம்பலமாகியுள்ளது.

அத்துடன் உடல வன்கூட்டு தொகுதிகளில் துப்பாக்கி ரவைகள் தைத்த தடயங்களோ அல்லது வெட்டுக்காய தடயங்களோ இதுவரை கண்டுபிடிக்கப்பட்டிருக்கவில்லை.

அதிலும் குழந்தைகளை அணைத்தவாறு,கை,கால்கள் கட்டப்பட்டவாறெல்லாம் வன்கூட்டுத்தொகுதிகள் மீட்கப்பட்டுள்ளன.

அவ்வகையில் ஹிட்லர் கால படுகொலை கலாச்சாரத்தை கோத்தபாய பயன்படுத்தியிருக்கலாமென சந்தேகிக்கப்படுகின்றது.

குறிப்பாக கடத்தப்பட்டு அனைவரையும் நிர்வாணமாக்கி சித்திரவதைகளின் பின்னர் நச்சூட்டப்பட்ட பின்னர் கொலை செய்யப்பட்டிருக்கலாமென சந்தேகம் ஆய்வாளர்களிடையே வலுத்துள்ளது.

எனினும் முன்னெடுக்கப்பட திட்டமிட்டுள்ள காபன் பரிசோதனையில் அவர்கள் எவ்வாறு கொல்லப்பட்டார்கள் என்பதில் சந்தேகமேயுள்ளது.

No comments