மைத்திரியைச் சந்திக்கவேயில்லை என்கிறார் மகிந்த


சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தாம் சந்தித்துப் பேச்சு நடத்தவில்லை என்று சிறிலங்காவின் முன்னாள்  ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை, கேகாலை சிறைச்சாலையில் நேற்று பார்வையிட்டு விட்டு வெளியே வந்த மகிந்த ராஜபக்சவிடம், சிறிலங்கா  ஜனாதிபதியை இரகசியமாக சந்தித்துப் பேச்சு நடத்தியதாக வெளியான செய்திகள் குறித்து, ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு மகிந்த ராஜபக்ச, ஞாயிற்றுக்கிழமை தாம் சிறிலங்கா  ஜனாதிபதியை சந்தித்துப் பேச்சு நடத்தவில்லை என்று தெரிவித்துள்ளார்.

No comments