மைத்திரிக்கு றோவுடன் தொடர்பு:மஹிந்த!

ஜனாதிபதிக்கு இந்திய உளவுதுறையுடன் தொடர்பிருந்தால் அது , தேசத் துரோகச் செயல். றோவுடன் அவ்வாறான தொடர்பு எதுவும் இருக்குமென, நான் நினைக்கவில்லை. எனினும், அது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும். அது தொடர்பில் அரசாங்கம், மௌனம் காத்துக்கொண்டிருக்க முடியாது. யுத்த காலத்தின் போது, நாங்கள் அவ்வாறு செய்யவில்லையென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த தெரிவித்துள்ளார்.

இந்தியப் புலனாய்வு அமைப்பான “றோ” தொடர்பில், கருத்துமோதல்களில் இலங்கை அரசியலில் சூடுபிடித்துள்ள நிலையில், “றோ” தொடர்பில், முன்னாள் ஜனாதிபதியும், குருநாகல் மாவட்ட எம்.பியுமான மஹிந்த ராஜபக்ஷ கருத்துரைத்துள்ளார்.

“இந்தியாவின் “றோ” புலனாய்வுச் சேவையுடன் தொடர்புடைய அமைச்சர்கள் இருப்பார்களாயின், அவர்களின் பெயர்களை வெளியிடவேண்டுமென, மஹிந்த ராஜபக்ஷ கோரியுள்ளார்.

தங்கல்ல, ஹேனகடுவ விஹாரைக்கு, நேற்று (24) வருகை தந்திருந்த மஹிந்த ராஜபக்ஷ, மத வழிபாடுகளை நிறைவு செய்துகொண்டதன் பின்னர், ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“இந்த அரசாங்கத்துக்கு எந்நாளும் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. “றோ” புலனாய்வுச் சேவையுடன் தொடர்புடைய அமைச்சர்கள் இருக்கின்றார்களா என்பது தொடர்பில் கூறுவது கடினமானது. எனினும், அமைச்சர் மஹிந்த அமரவீர அப்படிச் சொல்வாறாயின், அவ்வாறானவர்களின் பெயர் விவரங்களை வெளிப்படுத்த வேண்டும்” என்றார்.

No comments