வவுனியாவில் நிர்மாணிக்கப்டப்ட புதிய கழிப்பறைகளில் சட்டவிரோத செயற்பாடுகள்

வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு பின்புறமாக அமைக்கப்பட்டுள்ள புதிய கழிப்பறைக்கூடத்தின் பணிகள் அனைத்தும் முடிவடைந்துள்ள நிலையில் பொதுமக்கள் பாவனைக்காக கழிப்பறைகள்  கையளிக்கப்படாத அவலநிலை காணப்படுகின்றது. அத்துடன் குறித்த இடத்தில் சட்டவிரோதமான செயற்பாடுகள் இடம்பெறுவதாக வவுனியா வாழ் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

கறிப்பறையில் தொழில்புரியும் நபர்கள் பல கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள மலசலகூடத்தை தவறான நடவடிக்கைக்குப்பயன்படுத்தி வருகின்றமை கண்டறியப்பட்டுள்ளது.

வவுனியா நகரத்தின் முக்கிய பகுதியிலுள்ள மலசலகூடத்தினை அமைக்கப்பட்டுள்ளபோதிலும் அதனைத்திறந்து மக்கள் பாவனைக்கு கையளிப்பதற்கு நகரசபைக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள மக்கள் பிரதிநிதிகளாக தம்மை அடையாளப்படுத்தும் தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் உட்பட அனைவரும் அலட்சியமாக இருந்து வருகின்றமை இங்கே சுட்டிக்காட்டத்தக்கது.No comments