றோவின் கொலைச்சதி - முட்டாள்தனமான மறுப்பு என்கிறார் ஹிந்து ஆசிரியர்


தம்மைக் கொலை செய்ய ‘றோ’ சதித் திட்டம் தீட்டியதாக அமைச்சரவைக் கூட்டத்தில் சிறிலங்கா ஸனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கூறியதாக தாம் வெளியிட்ட செய்தி உண்மையானதே என்று ‘தி ஹிந்து’ நாளிதழின், ஆசிரியர் என்.ராம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கீச்சகத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

“ ‘தி ஹிந்து’ உண்மையைச் சொல்லும், தனது பணியை செய்துள்ளது.

இந்த அறிக்கையை வெளியிட முன்னர், எமது சிறிலங்கா செய்தியாளர் இந்த செய்தியை வெளியிட முன்னர், தாம் அறிந்த தகவலை பல சுதந்திரமான வட்டாரங்களில் உறுதிப்படுத்தியிருந்தார்.’

அவர்கள் முட்டாள்தனமான மறுப்புகளை வெளியிடட்டும்.  ஆனால் நாங்கள் எமது செய்தியாளரின் உண்மை சரிபார்க்கப்பட்ட அறிக்கையின் பக்கம் நிற்கிறோம்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments