மாங்குளத்திற்கு நகரும் வடமாகாண தலைநகர்!

வடமாகாணசபையின் தலைநகரை மாங்குளத்திற்கு இடமாற்றம் செய்யும் முயற்சியில் சந்தம் சந்தடியின்றி முனைப்பு பெற்றுள்ளது.ஏற்கனவே சுற்றுலா அமைச்சிற்கான தகவல்மையம் மாங்குளத்தில் நிறுவப்பட்டுள்ள நிலையில் அடுத்து தற்போது தமிழர் நாகரிக மையம் மாங்குளம் அம்பாள்புரத்தில் தோற்றம்பெறவுள்ளது.  
வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன் அவர்களது சிந்தனையில் உருவான தமிழரின் தொன்றுதொட்ட வாழ்வியலை பிரதிபலிக்கும் திறந்தவெளி அருங்காட்சியகத்துக்கான கருத்திட்டமான தமிழர் நாகரிக மையம் ஆரம்ப பணிகள் இன்று மாலை 3 மணிக்கு முல்லைத்தீவு மாந்தை கிழக்கு அம்பாள்புரம் பகுதியில் வடமாகாண முதலமைச்சர் நீதியரசர் க வி விக்னேஸ்வரன் அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் நீதியரசர் க வி விக்னேஸ்வரன் வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன் வடமாகாண சபை பிரதி அவைத்தலைவர் வ கமலேஸ்வரன் மாந்தைகிழக்கு பிரதேச சபை தவிசாளர் தயானந்தன் மாந்தைகிழக்கு பிரதேச செயலாளர் அமைச்சின் அதிகாரிகள் கலாச்சார, கல்வி திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட பலர் நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

No comments