தலைவனின் பெயர் சொல்ல தடை?:பாரதிராஜா!


இந்திய அமைதிப்படை ஈழத்தில் நிலைகொண்டிருந்தமை எவருக்கும் விருப்பமானதொன்றாக இருக்கவில்லை.அதனை எனது திரைப்படங்களில் நான் சுட்டிக்காட்ட விரும்பிய போதும் அதற்கு இந்திய தணிக்கை சபை தடை விதித்துவிட்டது.எனது விருப்பத்திற்குரிய தலைவனை பற்றி எதனை திரைப்பட்டத்தில் சேர்த்தாலும் அதனை தணிக்கை செய்துவிடுகின்றார்களென தென் இந்திய திரைப்பட இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கான விஜயமொன்றை மேற்கொண்டு வருகை தந்திருந்த அவர் யாழ்.ஊடக அமையத்தில் பத்திரிகையாளர் சந்திப்பொன்றிலும் பங்கெடுத்திருந்தார்.

அப்பொழுதே இந்திய தணிக்கை அதிகாரிகளது கெடுபிடிகளை சுட்டிக்காட்டிய அவர் அது இலங்கை தணிக்கை அதிகாரிகள் மட்டிலும் விடுதலைப்போராட்டம் பற்றி பேசினாலோ எழுதினாலோ நிச்சயமாக தடை விதிக்கப்படுகின்றதொன்றாகவே இருக்குமெனவும் தெரிவித்தார்.  

யுத்த காலத்திலும் திறமையான வரவேற்பினை பெற்ற திரைப்படங்கள் ஈழத்தில் தயாரிக்கப்பட்டிருந்தது.ஆனாலும் தொழில்நுட்ப துறை சார்ந்து ஈழத்து சினிமா இன்னும் மேம்படவேண்டுமென தெரிவித்த அவர் அதற்கான சூழல் ஏற்பட்டுவருவதாகவும் தெரிவித்தார்.

இதனிடையே தமிழகத்தில் சர்ச்சைக்குரிய விடயமாக உலாவிவரும் வைரமுத்து பாடகி சின்மயி விவகாரம் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார். 

No comments