ஒதுங்கியிருந்தார் முதலமைச்சர் மகன்!


வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன் தலைமையில் புதிய கட்சிக்குரிய பெயர் இன்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அவரது அமைச்சரவையின் இரு அமைச்சர்கள் மட்டுமே நிகழ்வில் பங்கெடுத்திருந்தனர்.அனந்தி மற்றும் சர்வேஸ்வரன் பங்கெடுத்திருந்தபோதும் குணசீலன் மற்றும் பவன் ஆகியோர் பிரசன்னமாகியிருக்கவில்லை. 

நல்லூர் கந்தசுவாமி ஆலய சுற்றாடலில் உள்ள நடராஜா பரமேஸ்வரி மண்டபத்தில் இன்று காலை நடைபெற்ற நிகழ்வில் பங்கெடுக்க வவுனியா,முல்லைதீவு பகுதிகளிலிருந்தெல்லாம் வாகனங்களில் உணர்வாளர்கள் திரண்டு வந்திருந்தனர்.

அவரது குடும்பத்தவர்கள் சார்பில் மகன் தனது மனைவி மற்றும் மகள் சகிதம் அமைதியாக அமர்ந்திருந்து பார்த்துக்கொண்டிருந்தார்.

நிகழ்வு ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே அவர் வந்திருந்த நிலையில் இருக்க இடமில்லாது திண்டாடுவதை கண்டு சிலர் தமது இருக்கைகளை ஒதுக்கி வழங்கி ஒத்துழைத்தனர். 

தனக்கு கைலாகு கொடுத்தவர்களிற்கு எழுந்து நின்று மரியாதையாக பதிலுக்கு நன்றி தெரிவித்தார். 

தானும் புதிதாக கட்சி தொடங்கிய அனந்தியும் முன்வரிசை பிரமுகராக அமர்ந்திருந்தார்.

No comments