பலாலி படைத்தளதிற்கு புதிய வசதிகள்?


வலி.வடக்கில் இராணுவ ஆக்கிரமிப்பிலுள்ள பகுதிகளில் படையினருக்கான வசதிகள் மற்றும் கட்டுமானங்களை ஏற்படுத்தி வழங்குவதில் இலங்கை அரசு முனைப்பு காட்டிவருகின்றது.அவ்வகையில் ஏற்கனவே அங்கு நிலை கொண்டுள்ள படையினருக்கான தன்னியக்க பண பரிவர்த்தனை மையங்களை நிறுவ திறந்து வைத்துள்ள நிலையில் தற்போது அங்கு தபாலகமொன்றும் திறந்துவைக்கப்பட்டுள்ளது.

இந்த தபால்  நிலையமானது யாழ்.மாவட்ட இராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராய்ச்சி முன்வைத்த கோரிக்கையை அடுத்தே அமைக்கப்பட்டுள்ளது.

இந்த தபால் நிலையத்தின் திறப்பு விழா இன்றைய தினம் நடைபெற்ற நிலையில், பலாலி படைமுகாமை சேர்ந்த படையினர் மற்றும் தபால் திணைக்களத்தை சேர்ந்த அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
ஏற்கனவே படையினருக்கான தொலைதொடர்பு சேவைக்கான மையம்,திரையரங்கு,பண்ணை தோட்டங்களை நிறுவியுள்ள நிலையில் தற்போது இவையும் வந்து சேர்ந்துள்ளது.


இதேவேளையில் மக்கள் மீள் குடியேற்றப்பட்ட மயிலிட்டி மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களை சேர்ந்த மக்களுக்கு தபால் நிலைய சேவை மற்றும் மருத்துவ சேவைகள் இதுவரை ஆரம்பிக்கப்படவில்லையென இடம்பெயர்ந்தோர் அமைப்புக்கள் குற்றஞ்சுமத்தியுள்ளன. குறித்த சேவைகளுக்காக அந்த மக்கள் நீண்ட தூரம் பயணித்து காங்கேசந்துறை மற்றும் தெல்லிப்பளை ஆகிய பிரதேசங்களுக்கே வர வேண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments